Thursday, 27 September 2012

வானம் பாத்த பூமி

 

வானம் பாத்த பூமியில


கல்லு மழை பெய்யயில


வன்னா முகம் வாடையில


வாத்து ரெண்டும் பேசிக்குது


வெள்ளம் வர போகுதுன்னு

 

 

கண்ணுக்குள்ள வச்சிருந்த


ஈரம் எல்லாம் தீந்திடுச்சே


இந்த மழை வந்து நின்னா


நாத்தில் உள்ள முத்தயெல்லாம்


கடன் வாங்கி சேத்துக்குவ

 

 

அந்த வீடு இந்த வீடு


மாத்தி மாத்தி ஓடி ஓடி


கண்ணில் பட்ட முத்தயெல்லாம்


போட்டி போட்டு சேக்குது


இந்த பிஞ்சு மனம்

 

 

இந்த மழை போதாதுன்னு


வயல் வரப்பு காத்திருக்கு


இன்னும் கொஞ்சம் வேணுமுன்னு


குளக்கரையும் வேண்டிருக்கு


வெள்ளம் வர காணமுன்னு


வாத்து கூட ஏங்கிடிச்சி

 

 

நண்பனே



கைபேசி கையில் வந்ததும்
 
குட் மார்னிங் சொல்லும் நண்பனே

 
காலை நேரக் கணவுகள்

 
 
டர்ன் ஆப் ஆகும் ஒலியிலே

 
கவலைகள் பொதிந்த மனதிலே

 
 
நிம்மதி இன்பாக்ஸ் வழியிலே.............



Wednesday, 26 September 2012

நண்பன் செய்யும் துரோகம்


கொளித்திவிட்டா என் நெஞ்ச அவ
 
ஒரு தீக்குச்சியக் கிழிக்காமலே

 
கொழுந்துவிட்டு அது எறிகையில

 
மண்ணெண்ணைய மொன்டு ஊத்துரா


 

ஏனோ ஏனோ நண்பன் செய்யும்

 
துரோகம் கூட வலிக்கிறதே

 
இந்த காதல் செய்யும் காயத்தை விடவும்

 
வலிதாய் நெஞ்சை கிழிக்கிறதே


 

இந்த நட்பும் அது பொய்தானா

 
அந்த தீயில் எறிகிற காகிதம்
 
இந்தப் பொய்யான நட்பினைத் தான்

 
இத்தனைக் காலம் காட்டினாய்


 

இந்த நட்புக்கு அடையாலம்

  
அந்த கர்ணனை கேட்கின்றேன்
 
இது பொய் நட்பா


நான் செய்தது தப்பா
 
புரியவில்லை தெரியவில்லை

 
இந்த நட்பின் இலக்கணம் விளங்கவில்லை


 

என் நண்பன் அவனை நினைத்தாலே


நெஞ்சம் எங்கும் இனிக்கிறதே

 
துரோகம் செய்த போதிலும்


என் உயிர் நண்பன் அவன்தானே.......


பாரி ஆனான்


எச்சில் சோற்றைக் கூட

தானம் தர மறுப்பவன்

பாரி ஆனான் அன்று

பிச்சைக்காரனுக்கு தானம் தந்து

இரயில் நிலையத்தில் சில்லரை கேட்டதால்.........




அம்மாவின் அன்பு



அம்மாவின் அன்பு

உருவான பின்பு
 
பூமியில் உயிர் வந்தது


 

கடவுளின் உள்ளம்


பெரிதுதான் என்றால்
 
தாய்க்கு அது நிகராகுமா


 

தெய்வத்தின் நிழலில்

 
எவர் நிற்க முடியும்

 
நின்றேன் நான்


என் தாயின் நிழல் அடியிலே

 

பூமியில் கொஞ்சம்

   
உயிருள்ள நெஞ்சம்
 
தாயன்றி வேறேதடா


 

கால் கொலுசு சப்தம்


கேட்கும் தினம் நித்தம்
 
தாய் அன்பு விளையாட்டிலே


 

உலகில் உயிர் நிற்கும்

 
கடைசி நொடி மட்டும்

 
தாய் அன்பு அழியாதது

 
அதையன்றி உயர்வேதது..........