Thursday, 27 September 2012

வானம் பாத்த பூமி

 

வானம் பாத்த பூமியில


கல்லு மழை பெய்யயில


வன்னா முகம் வாடையில


வாத்து ரெண்டும் பேசிக்குது


வெள்ளம் வர போகுதுன்னு

 

 

கண்ணுக்குள்ள வச்சிருந்த


ஈரம் எல்லாம் தீந்திடுச்சே


இந்த மழை வந்து நின்னா


நாத்தில் உள்ள முத்தயெல்லாம்


கடன் வாங்கி சேத்துக்குவ

 

 

அந்த வீடு இந்த வீடு


மாத்தி மாத்தி ஓடி ஓடி


கண்ணில் பட்ட முத்தயெல்லாம்


போட்டி போட்டு சேக்குது


இந்த பிஞ்சு மனம்

 

 

இந்த மழை போதாதுன்னு


வயல் வரப்பு காத்திருக்கு


இன்னும் கொஞ்சம் வேணுமுன்னு


குளக்கரையும் வேண்டிருக்கு


வெள்ளம் வர காணமுன்னு


வாத்து கூட ஏங்கிடிச்சி

 

 

No comments:

Post a Comment