Wednesday, 24 October 2012

தாலாட்டு


சின்ன சின்ன கண்ணுக்குள்ள

நித்தம் நித்தம் நித்திரையை


கொண்டு வந்து சேர்க்க தானே ஆசை



அந்த வானம் வந்து

உன் முகத்தை பாத்துப்புட்டு


வெண்ணிலவே வேணாமுன்னு போகும்


நிலா சோறு ஊட்டிடவே


அந்த வெண்ணிலவு


வேணும் நீயும் தூங்கு


கண்ண மூடி தூங்கு



குட்டி குட்டி எறும்பெல்லாம்

உன்ன சுத்தி நின்னுகிட்டு


கண்ணா மூச்சி ஆட தானே ஏங்கும்


அதன் அம்மா வந்து தேடிடுமே


சிட்டெறும்பு வீடு போகனுமே


நீயும் கொஞ்சம் கண்ண மூடி தூங்கு



ஊரில் உள்ள காத்து எல்லாம்

உன்ன தேடி வந்துடுது


நீ தூங்கலன்னு சேதி ஒன்ன கேட்டு


காற்றாலை அது நின்னுடுச்சே


காத்து இங்க வந்ததால


மின் விசிறி இரவில் ஓடனுமே


நீயும் கொஞ்சம் கண்ண மூடி தூங்கு…….!


Friday, 19 October 2012

என் தந்தை



பூமி சற்று சிறிதுதான்

கடலும் இங்கு குட்டைதான்

ககோளம் கூட நுண்மை தான்

என் தந்தை அன்பு காட்டினால்
 

சின்ன சின்ன தவறுகள்

சிறு வயதில் நான் செய்திட

என்னை சாட மனமின்றி

தாயை சாடி சென்றிடுவார்


வீட்டில் செய்யும் பண்டங்களை

ருசி பார்க்க கூட தவறிடுவார்

பிடிக்கவில்லை என்று அல்ல

எனக்கு பிடிக்கும் என்பதால்


பொங்கல் தீபாவளி நாட்களில்

சராசரி இன்பத்தை கூட

எனது தந்தை அடைய மாட்டார்

புத்தாடை பட்டாசு எனக்கு

புது பனியனை மட்டும்

வாங்கி கொள்வார் தனக்கு


பத்தாவது தேர்வில்

நல்ல பதிப்பெண் எனக்கு

என்னை விட

என் தந்தை அடைந்த

இன்பத்திற்கு அளவே இல்லை


இப்படிப்பட்ட என் தந்தையை

அவர் இனி வாழும் நாட்களில்

இன்பத்தை மட்டுமே நான் கொடுக்க

இந்த கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.....!



Thursday, 18 October 2012

போர் வீரன்



காலம் காலம் சென்று

எம் மக்கள் உறங்கும் போதும்

அந்த கனவிலும் கூட


என் நாட்டில் அமைதி நிலைத்திட வேண்டும்




போர் அது புணரும் போதும்


கைகளில் ஆயுதம் ஏந்தி


எதிரியை வீழ்த்திடும் போதும்


என் மக்கள் என்னிடம் வந்து


போர் நடந்ததா என்று வினவிட வேண்டும்




நரகத்தின் பிடியில் சிக்கி


சொர்கம் அழிந்திடும் போதும்


கடவுள்கள் கூடி பேசி


உயிரை காத்திட வேண்டி


என் நாட்டில் தஞ்சம் அடைந்திட வேண்டும்




தாயிடம் பாசம் கொண்டு


அவள் முகத்தை ஒருமுறை பார்க்க


விடுப்பில் சொந்த ஊர் சென்று


அவள் முன்னே நின்றிடும் போது


ஏன் வந்தாய் என்று சாடிட வேண்டும் ........!


Tuesday, 16 October 2012

ஆடை

உலகம் பிறந்த அந்த நொடி
கடவுள் படைத்த மனிதனிடம்
சிறிதும் இல்லை பொறியுணர்வு
சுற்றி திறியும் பகலவனின்
அதியுட்டனம் கூட தெரியாமல்
மானம் இன்றி அம்மனமாய்
பூமிதன் மடியில் கொண்ட மனிதனிடம்
சித்திரையின் பெயரான
ஆடை எனும் அனிகலனை
மானம் காக்க கடவுள் தந்தான்


இலை தழையாய் தோன்றியது
விலாவையும் தொடையும் பிரித்து
அரங்கேற்றம் செய்து கொண்டது
புதியதொரு முயற்சியாய்
கலவி எனும் கலையை
மனித இனம் அறிந்து கொள்ள
ஆண்பால் பெண்பால் உருவானது


ஆணும் பெண்ணும் சேர்ந்து வர
பிரித்தறிய இயலாமல்
மக்கிப் போன மனித இனம்
கண்டறிந்த இன்னும் ஒரு ஆடை
பெண் பாலரின் மானம் காக்க
இவ்வுலகம் பற்றிக்கொண்ட
இடுப்பு மேல் ஆண்ட மேலாடை


காலம் காலம் கடந்தோட
இலை தழைகள் நூலாக
பின்னொரு காலத்தில்
நூலது நூலாடையாய் மாற
வேட்டி எனும் ஆணுடையும்
சேலை எனும் பெண்ணுடையும்
ஆடை இலக்கணமாய் உருவானது


இலக்கணம் அது இன்னல் பெற
வேட்டி அது கிழிந்து விட
கால்சட்டை உருவானது
சேலை அதை சுமந்திட
பெண்கள் இனம் வெறுத்ததால்
மாற்றம் கொண்ட பெண் கால்சட்டை
சுடிதாராய் உருவானது


இத்தனை பரிமானங்களில்
வளர்ந்த ஆடை அதை
உலகம் பிறந்த அந்த நொடியை
நோக்கி வழிநடத்தும்
மாந்தர் இனம் வாழ்க பல்லாண்டு……!

Monday, 8 October 2012

விருப்பம் இல்லை



இந்த பூமியே பொய் தானடி
 
நீ
இல்லையேல் நான் ஏதடி

 
அந்த
புவி அதனின் ஈர்ப்பதனை

 
மரம்
செடிகள் மதிப்பதில்லை

 
மேலோங்கியே
வளர்ந்தன

 
என்
காதலைப் போல

 

உறவதினில்
நாட்டம் இல்லை

 
பணம்
பொருளை எதிர்பார்க்கும்


மதம் அதனை மதிப்பதில்லை
 
காதல்
எனும் கடவுளால்

 

கனவு
காண விரும்பவில்லை

 
தூக்கம்
அதை தருவதால்

 
கைபேசியில்
விருப்பமில்லை

 
உன்
முகம் காட்ட மறுப்பதால்

 

இரவதினில்
விருப்பம் இல்லை

 
நீ
உறங்கச் செல்வதால்

 
மின்
தடையில் விருப்பமில்லை

 
உன்
கனவை கலைப்பதால்

 
காதல்
சொல்ல விருப்பமில்லை

 
தினம்
தினம் நீ மறுப்பதால்


Wednesday, 3 October 2012

காதலும் நட்பும்


சிரித்துப் பேசி சீனச் சுவரை

கடந்து சென்றது நட்பு

மறுத்துப் பேசி குட்டிச் சுவரை

தானம் தந்தது காதல்


தோளைத் தந்து சோகம் கண்டு

காயம் தீர்ப்பது நட்பு

சோகம் தந்து ஈபிள் டவரின்

ஆனவம் கொன்டது காதல்


ஓதும் ஒலியும் சிலுவை சிவனும்

ஒன்றாய் சேர்ந்தது நட்பு

ஓலைக் குடிசையில் சாய்ந்து நிற்கும்

பைசா கோபுரம் காதல்


பிரிவின் உண்மை புரியா வண்னம்

உயிருடன் கலந்தது நட்பு

பரிவே இன்றி பினமாய் நிற்கும்

பிரமீடின் உருவம் காதல்