மழை துளியின் ஓசை
காதில் விழ ஆசை
குளிர் தந்திடும் காற்று
என் தேகம் தொட ஆசை
என் ஆசை நடந்திடவே
கல்லாகிய கடவுளிடம் சென்றேன்
என் ஆசை அதை சொன்னேன்
சில தினங்கள் சென்றதும்
பூசை அது நடந்தது
மழை அதனை வேண்டி
அன்று தெரிய வந்தது
இறைவன் செவி மந்தமே
பூசாரியின் செவி கூர்மை என்று
அன்று இரவே
கடவுள் அவன்
கனவில் வந்தான்
நான் சற்று உரக்கவே பேசினேன்
அவன் மெதுவாக சொன்னான்
“மழை என் Department இல்ல
நீ போய் இவன பாரு”
என்று மற்றும் ஒரு
கோவிலுக்கு வழியை சொன்னான்
அன்று விடிந்ததும்
அந்த கோவிலின் வழி
நினைவில் இருந்தது
விரைவாக சென்று சேர்ந்தேன்
பாதி அழிந்த நிலையில்
ஒரு காடு தெரிந்தது
கோவிலின் சுவடு எதுவும் இல்லை
இருந்தும் அழைத்தேன் மழைக் கடவுளை
என்ன வேண்டும் என்றான்
கண்ணில் படாமலே
மழை வேண்டும் என்றேன்
“Stock இல்லை என்றான்”
விடவில்லை நான்
காற்றாவது வேண்டும் என்றேன்
கவிதை சொன்னான்
“வெட்டப்படுவது நாங்கள்
குட்டப்படுவது நீங்கள்
வெட்டுவதை நிறுத்துங்கள்
கொட்டுகிறேன் மழையாய்”
அப்போது உணர்ந்தேன்
என்னிடம் பேசியது
வெட்டப்பட்ட மரங்கள் என்று
No comments:
Post a Comment