உன் தேகம் தாலாட்ட
நெஞ்சம் தேன் ஊட்ட
மொய்க்கும் வண்டாக மாறினேன்
உயிர் பூவை எங்கெங்கும் தேடினேன்
உயிர் பூவை தொலைத்தேனே
காதல் மறந்தேனே
பூமி இரண்டானது
என் காதல் துண்டானது
பூக்கும் பூக்களுக்கு
வாசம் கொண்டு வரும்
சிறு வண்டு அதன் மேல்
கொண்ட காதல் தான்
இந்த பெரிய பூமிதனில்
பூக்கள் கொண்டு வரும்
வாசம் இங்கு பல ஆயிரங்கள்
உன் வாசம் தேடி வந்து
வண்டாய் அலைகின்றேன்
என் காதல் பெற்று
நீ வாசம் தருவாயா
இந்த பூமி சிறிது தான்
நம் காதல் பெரிது தான்
தேடி வருவாயா – மாற்றாய்
என்னை தேட விடுவாயா……!
No comments:
Post a Comment