Friday, 30 November 2012

வேண்டாம் வேண்டாம்

காதல் காதல்

அது கனவிலும் வேண்டாம்

கண்களின் உறக்கம்

அது பறித்திடும் வேண்டாம்


பதுமைகள் பேசும்

அந்த முதுமைகள் வேண்டாம்

பொய்கள் பேசும்

அந்த உண்மைகள் வேண்டாம்


கவிதைப் புணையும்

அந்த சிந்தனை வேண்டாம்

கற்பனை உலகில்

அந்த தவிப்புகள் வேண்டாம்


கல்லறை கண்களில்

அவள் மிரட்டலும் வேண்டாம்

நண்பனை மறந்திடும்

இந்த காதலும் வேண்டாம்

1 comment:

  1. After 8 years can I comment it. வேண்டாம் வேண்டாம்

    ReplyDelete