Friday, 30 November 2012

அழகு தான்

பக்கத்து வீட்டு தேவதை

பார்ப்பதற்கு அழகு தான்

பட்டாம்பூச்சி சிறகுகள்

பறக்க பறக்க அழகு தான்


உயிரை கொல்லும் பசியிலே

உணவு இருந்தால் அழகு தான்

உண்மை சொல்ல துனிந்தவன்

ஊமை என்றால் அழகு தான்


காதல் உள்ள மனதிலே

கவிதை சொன்னால் அழகு தான்

களவு என்னும் தொழிலிலே

கள்வர் எல்லாம் அழகு தான்


ஆழிப் பெரும் அலையிலே

அலையும் மீன்கள் அழகு தான்

ஆடை அது பாலிலே

அடியில் இருந்தால் அழகு தான்


கவிதை புனைந்த என்னிடம்

கருத்தை சொன்னால் அழகு தான்

கவிஞர் இவன் எனக் கூறி

கற்களை வீசினால் அழகுதான்

No comments:

Post a Comment