Wednesday, 7 November 2012

மின்னியல் காதல்

என் அன்பே

நீ ஒரு மின் சுற்றா

நான் வரவா

இனி நான் மின்சாரம்


அடி பெண்ணே

நீ என்ன மின்தடையா

நான் வரவா

இனி நான் காற்றாலை


கொடி மலரே

நீ என்ன மின்னேற்றமா

நான் வரவா

இனி நான் மின்தேக்கி


துளி நீரே

நீ என்ன மின் புலமா

நான் வரவா

இனி நான் இடிதாங்கி


சிறு துகளே

நீ என்ன அணு உலையா

நான் வரவா

இனி நான் யுரேனியம்


சுடும் காற்றே

நீ என்ன கரும் புகையா

நான் வரவா

இனி நான் மின்னோடி…..!

No comments:

Post a Comment