Wednesday, 7 November 2012

காஞ்சிபுரம்



வாரத்தின் முதல் நாள்

அலுவலகம் செல்ல

அவசரமாய் தயாராகி

சாப்பிடும் வேளையில்

நினைவில் வரும் கோவில் (காஞ்சிபுரம்) இட்லி

உணவகத்தை நாடிச் செல்ல தூண்டும்


பேருந்து நிலையம் செல்ல

மிதிவண்டியை அதிவேகமாய் இயக்கும் போது

வழி எங்கும் கோவில்கள்

வேகத்தடையாய் வந்து நிற்க்கும்

விட்டு செல்ல மனம் இன்றி

சற்றே நின்று வணங்கிச் செல்வேன்


பேருந்து ராஜ வீதிகளை கடக்கும் போது

கண்ணில் பளிச்சென தென்படும்

கலை நயம் மிக்க ராஜகோபுரங்கள்

பெருமை அடைய செய்யும்

இந்த கோவில் நகரத்தில்

நான் பிறந்ததை எண்ணி


இந்த கோவில் நகரத்தின்

எல்லையை கடக்கும் போது

மனம் சற்று கலங்கத் தான் செய்யும்

அறிஞர் அண்ணாவின் நினைவு தூன் கண்டு

இருந்தும் பெருமை தான் எனக்கு

அவரை போல் முதல்வரை

இந்த நாட்டுக்கு தந்தது

என் காஞ்சிபுரம் தானே......!

No comments:

Post a Comment